வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்காணித்தவர் தோல்வி

வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்காணித்தவர் தோல்வி

1 mins read
26168ffc-6699-4e8a-8963-0fdb5da4171a
-

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹஸ்தினாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிட்டவர் யோகேஷ் வர்மா. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்துக்கு வெளியே, தொலைவில் இருந்தபடியே, காரில் நின்று கொண்டு பைனாகுலர் மூலம் அவற்றைக் கண்காணித்தார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் கதிக் என்பவரிடம் யோகேஷ் வர்மா 7,312 வாக்குகள் வித்தியாசத்தில் யோகே‌ஷ் தோல்வியடைந்தார்.