ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்; பயணிகள் மீட்பு

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்; பயணிகள் மீட்பு

1 mins read
c72be5c0-3163-442e-bac6-0527866dd4f1
ஓடுதளத்தில் இருந்து விலகி மண் தரையில் நின்ற விமானம். படம்: ஏஎன்ஐ -

ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் விமானநிலையத்தில் நேற்று நடைபெறவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

ஏடிஆர் 72 ரக விமானம் ஒன்று நேற்று காலை 11.32 மணிக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜபல்பூர் விமானநிலையத்திற்குப் புறப்பட்டது.

மதியம் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், தரையிறங்கிய பின்னர் விமான ஓடுதளத்திலிருந்து விலகி மண் தரையில் சென்றது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம் பவத்தால் விமானம் விபத்துகுள்ளாக வில்லை. அதில் பயணம் செய்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்திய சிவில் விமானப் போக்கு வரத்துத் துறை இயக்குநரக அதி காரிகள் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தர விட்டுள்ளனர்.