பஞ்சாப் வெற்றி: அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் ஆம்ஆத்மி குறி

பஞ்சாப் வெற்றி: அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் ஆம்ஆத்மி குறி

1 mins read
ccd339a3-b8d9-4c24-9ed5-3723ba08f54c
பஞ்சாப்பில் வெற்றிக்கு வித்திட்ட அதே குழுவை ராஜஸ்தான் அனுப்ப ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வியூகம் வகுக்கிறார். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பஞ்­சாப் மாநி­லத்­தில் அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ், பாஜக ஆகிய தேசிய கட்­சி­க­ளை­யும் பஞ்­சாப் மாநி­லத்­தின் மிக முக்­கி­ய­மான அகாலி தளம் கட்­சி­யை­யும் வீழ்த்தி ஆம் ஆத்மி மாபெ­ரும் அர­சி­யல் சாதனையை படைத்­தது.

பஞ்­சாப் மாநி­லத்­தின் ஆட்சியைப் பிடித்துவிட்ட அமோக வெற்­றிக் களிப்­பில் அந்­தக் கட்சி அடுத்த இலக்கை நிர்­ண­யித்­துள்­ளது.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் அடுத்த ஆண்டு டிசம்­ப­ரில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க இருக்­கிறது.

இதில் எப்­ப­டி­யும் வென்று அந்த மாநி­லத்தையும் கைப்­பற்றிவிட வேண்­டும் என்று ஆம் ஆத்மி முடிவு செய்­துள்­ள­தாக கட்சி வட்டா­ரங்­கள் ஓங்கி அறி­வித்­தன.

பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆம் ஆத்மி வெற்­றியை உறு­திப்­ப­டுத்­திய அதே குழுவை ராஜஸ்­தா­னுக்கு அனுப்ப கட்சி­யின் தலை­மை­பீ­டம் முடிவு செய்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

ஆனால் ராஜஸ்தானில் ஆம் ஆத்­மி­யின் ஜம்­பம் பலிக்­காது என்று அந்த மாநி­லத்­தின் இரண்டு பெரும் போட்டி அர­சி­யல் கட்­சி­க­ளான காங்­கி­ரஸ் கட்­சி­யும் பாஜ­க­வும் திட்டவட்­ட­மா­கத் தெரி­வித்­தன. ஆம் ஆத்மி ராஜஸ்­தா­னில் தன் இறக்­கையை விரிக்க வாய்ப்பே இல்லை. ராஜஸ்­தான் வேறு, பஞ்­சாப் வேறு என்று அவை கூறின.

பஞ்­சாப் வெற்­றிச் செய்தி காதில் விழுந்­த­துமே உற்­சாகம் அடைந்து அடுத்த ஆண்டு தேர்தலை நினைத்து செயல்பட தொடங்கி விட்டதாக ராஜஸ்­தான் ஆம் ஆத்மி தொண்­டர்­கள் கூறி உள்ளனர்.