அமராவதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஜக்கையாபேட்டை பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 6 மாத குழந்தை உட்பட ஐவர் மாண்டனர்.
ஒரு பாலத்தில் அவர்கள் கார் சென்றுகொண்டிருந்த போது சாலை ஓரம் இருந்த தடுப்பில் மோதி கார் உருக்குலைந்தது.
அந்த காரில் இரு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இருந்தனர்.
அவர்கள் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

