புதுடெல்லி: இந்தியாவில் மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் ஐந்து தொகுதி களுக்கு அடுத்த மாதம் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் நாடாளுமன்றத் தொகுதியும் சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும். வாக்குகள் அடுத்த மாதம் 16 ஆம் தேதி எண்ணப்படும்.
இதனிடையே, அசன்கால் நாடாளுமன்றத் தொகுதிக்கு சத்ருகன் சின்ஹாவும் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு சுப்ரியா சுலேவும் வேட்பாளர்கள் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

