புதுடெல்லி: உக்ரேனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் பேசிய பிரதமர், பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளியல் வளர்ச்சியை மேம்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.
உக்ரேன் போர் சூழலால் இந்தியாவின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விவாதித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

