இன்று கூடும் நாடாளுமன்றம்

இன்று கூடும் நாடாளுமன்றம்

1 mins read
af5353bb-6590-417f-9199-4b9c082c17b9
-

புது­டெல்லி: இந்­திய நாடா­ளு­மன்­றம் இன்று கூடு­கிறது. வர­வு­செ­ல­வுத் திட்ட கூட்­டத்­தொ­டர் கடந்த ஜன­வரி 31ஆம் தேதி தொடங்­கி­யது. பிப்­ர­வரி 1ஆம் தேதி மத்­திய வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அந்த கூட்­டத்­தொ­ட­ரின் முதல் பகுதி பிப்­ர­வரி 11ஆம் தேதி வரை நடந்­தது.

வர­வு­செ­ல­வுத் திட்ட கூட்­டத்­தொ­ட­ரின் 2-வது அமர்வை மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்­ரல் 8 ஆம்­தேதி வரை நடத்த முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. ஐந்து மாநில தேர்­தல் முடிந்­துள்ள நிலை­யில் பர­ப­ரப்­பான அர­சி­யல் சூழ்­நி­லை­களுக்கிடையே இன்­றைய கூட்­டம் தொடங்க உள்­ளது. பல்­வேறு பிரச்­சி­னை­களை எழுப்ப எதிர்க்­கட்­சி­கள் முடிவு செய்­துள்­ள­னர்.

மத்­திய அரசு பொதுச் சொத்து­களை விற்­ப­தற்கு முடிவு செய்­துள்­ளது. இதற்கு அனைத்து எதிர்க்­கட்­சி­களும் ஒருங்­கிணைந்து எதிர்ப்பு தெரி­விக்க உள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டது.