உக்ரேன் நிலவரம்: பிரதமர் மோடி உயர்நிலை கூட்டம், விவாதிப்பு

உக்ரேன் நிலவரம்: பிரதமர் மோடி உயர்நிலை கூட்டம், விவாதிப்பு

1 mins read
923cc089-108a-4883-9ba8-8333d30dc37d
-

புது­டெல்லி: இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, உக்­ரேன் நில­வ­ரம் பற்றி விவா­திக்க நேற்று உயர் நிலைக் கூட்­டத்­தைக் கூட்­டி­னார். (படம்)

உக்­ரேன் மீதான ரஷ்யா­வின் தாக்­கு­த­லில் ஏரா­ள­மான பொது­மக்கள், படை­வீ­ரர்­கள் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உக்­ரே­னில் சிக்­கி­யுள்ள மாண­வர்­கள் உட்­பட ஏரா­ள­மான இந்­தி­யர்­களை தாய்­நாடு அழைத்து வரும் நட­வ­டிக்­கை­களை இந்­திய அரசு தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், பிர­த­மர் நரேந்­திர மோடி உக்­ரேன் தொடர்­பில் உயர்­மட்­டக் குழுக் கூட்­டத்தை நேற்று புது­டெல்­லி­யில் நடத்­தி­னார்.

மத்­திய அமைச்­சர்­கள் நிர்­மலா சீதா­ரா­மன், ராஜ்­நாத் சிங், ஜெய்­சங்­கர், தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல் உள்­ளிட்­டோர் அதில் பங்­கேற்­ற­னர்.

உக்­ரேன் போர் சூழ­லால் உலக நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு­கள், இந்­தி­யா­வின் பாது­காப்பு நில­வரம், முப்­ப­டை­க­ளின் தயார் நிலை பற்றி பிர­த­மர் மோடி ஆலோ­சித்த தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.