உக்ரேன் எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு வந்த பெண் விமானிக்கு குவியும் பாராட்டு

உக்ரேன் எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு வந்த பெண் விமானிக்கு குவியும் பாராட்டு

2 mins read
3a9decac-e722-431d-9da1-c29e3119407e
பெண் விமானி மகாஸ்வேதா. படம்: ஊடகம் -

புது­டெல்லி: உக்­ரே­னில் இருந்து தப்­பித்து அதன் அண்டை நாடு­களில் தஞ்­சம் அடைந்த ஏரா­ள­மான இந்­திய மாண­வர்­களை மீட்ட இந்­தி­யப் பெண் விமா­னிக்கு சமூக ஊட­கங்­களில் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

மகாஸ்­வேதா சக்­ர­வர்த்தி என்ற அந்­தப் பெண் விமானி 800க்கும் மேற்­பட்ட மாண­வர்­களை மீட்­ப­தற்­காக போலந்து, ஹங்­கேரி நாடு­களுக்­குப் பல­முறை பறந்­துள்­ளார்.

அவ்­விரு நாடு­களில் இருந்து மாண­வர்­களை ஏற்­றிக்­கொண்டு டெல்­லிக்­கும் உத்­த­ரப் பி­ர­தே­சத்தில் உள்ள ஹிண்­டன் விமான தளத்துக்­கும் அவர் வந்­துள்­ளார்.

கோல்­கத்­தா­வைச் சேர்ந்த மகாஸ்­வே­தா­வுக்கு 24 வய­தா­கிறது. மேற்கு வங்க பாஜக மக­ளி­ரணி தலை­வ­ரான தனு­ஜா­வின் மக­ளான இவ­ரது புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

போர் நடந்து வரும் நிலையில், உக்­ரே­னின் அண்டை நாடு­களுக்குச் சென்று துணிச்­சலுடன் மாண­வர்­களை மீட்டு வந்த மகாஸ்வேதாவைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பிய மாண­வர்­கள் அனை­வ­ரும் இந்­தி­யா­வில் தங்­கள் கல்­வி­யைத் தொடர அனு­ம­திக்க வேண்­டும் என்று கோரி, டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பாதிக்­கப்­பட்ட மாண­வர்­கள் சார்பில் பிர­வாசி சட்­டப்­பி­ரிவு என்ற பெய­ரில் டெல்லி உயர் நீதி­மன்றத்­தில் மனு­த்தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ளது.

அதில் இரு­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் படிப்பைத் தொடர முடி­யாத நிலை­யில் இருப்­ப­தா­க­வும் தங்­களை இந்­தி­யா­வில் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் சேர்க்க எந்­த­வி­த­மான விதி­மு­றை­களும் நடை­மு­றை­யில் இல்லை என்­றும் அம்­ம­னு­வில் மாண­வர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"எனவே, போரால் பாதிக்கப்பட்டு திரும்பியுள்ள நாங்கள் எந்த நிலையில் படிப்பைத் தவறவிட்டோமோ, அதேநிலையில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என மாணவர்கள் கோரியுள்ளனர்.

இந்­நி­லை­யில், உக்­ரே­னி­ல் இருந்து திரும்­பிய இந்­திய மாண­வர்­களை மருத்­து­வர்­க­ளாக்­கு­வதை உறுதி செய்­வோம் என மத்­திய கல்­வித்­துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்­துள்­ளார்.

உக்­ரே­னில் இருந்து திரும்­பி­உள்ள மாண­வர்­களை அதிர்ச்­சியில் இருந்து விடு­வித்து பார்த்­துக் கொள்ள வேண்­டிய நேரம் இது என்­றும் அவர்­க­ளுக்கு உத­வு­வ­தில் மத்­திய அரசு அர்ப்­ப­ணிப்பு உணர்வு­டன் செயல்­படும் என்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர் கூறி­னார்.