நிதின் கட்காரி: போரால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடி

நிதின் கட்காரி: போரால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடி

2 mins read
31ac2e24-77ca-4c12-8d2b-8772c8bbd551
-

புது­டெல்லி: ரஷ்யா, உக்­ரேன் இடை­யி­லான போர் கார­ண­மாக இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சாலைப் போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

சரக்­கு­களை அனுப்­பு­வ­தற்­கான கட்­ட­ணம் அதி­க­ரித்­துள்­ளதாகவும் போர் சூழல் கார­ண­மாக ஏற்றுமதி ­யா­ளர்­கள் நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த இரு வாரங்­க­ளாக உக்­ரேன் மீது ரஷ்ய துருப்­புக்­கள் நடத்தி வரும் தாக்­கு­தல் கார­ண­மாக அனைத்­து­லக விநி­யோ­கச் சங்­கிலி ஆங்­காங்கே துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் உல­க­ள­வில் பர­வ­லாக ஏற்­று­மதி, இறக்­கு­மதி நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல.

ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்டிய சரக்­கு­கள் குவிந்­துள்ள போதிலும், அதற்­கான கொள்­க­லன்­கள் போதிய அள­வில் இல்லை என்றும் அதனால் சரக்­கு­கள் தேங்­கிக்கிடப்­ப­தா­க­வும் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தரப்­பில் கூறப்­படு­கிறது.

மேலும் சரக்­கு­களை கையாள்­வ­தற்­கான, ஏற்­று­மதி செய்­வ­தற்­கான கட்­ட­ணங்­கள் சுமார் 30 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் சந்தை நில­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், ஏற்­று­ம­திக் கட்­ட­ண உயர்வு, கொள்­க­லன் தட்­டுப்­பாடு உள்­ளிட்ட கார­ணங்­களால் ஏற்­று­மதி செய்ய வேண்­டிய பொருள்­கள் அதி­க­மாக உள்ள போதி­லும், ஏற்­று­மதி நிறு­வ­னங்­களால் பய­ன­டைய முடி­ய­வில்லை என அமைச்­சர் நிதின் கட்­காரி கூறி­யுள்­ளார்.

"தற்­போ­தைய நில­வ­ரம் இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­களை கவ­லை­ அடையச் செய்­துள்­ளது.

இந்­தி­யா­வின் ஏற்­று­மதி கச்சா எண்­ணெய்யைப் பெரு­ம­ளவு சார்ந்­துள்­ளது. இந்­நிலை மாற வேண்­டும். இது காலத்­தின் கட்­டா­யம். கச்சா எண்­ணெய்க்­குப் பதி­லாக பசுமை ஹைட்­ர­ஜன் போன்­ற­வற்றை மாற்று எரி­பொ­ரு­ளா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும்," என அமைச்­சர் நிதின் கட்­காரி வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேலும், அனைத்­து­ல­கச் சந்­தை­யில் போட்டி போடும் வகை­யில் இந்­தி­ய ஏற்­று­மதித் துறையை மேம்­படுத்த ரூ.46,000 கோடி முத­லீட்­டில் சரக்­குப் போக்­கு­வ­ரத்து தொடர்­பாக 35 பன்­னோக்கு மாதிரி தள­வாடப் பூங்­காக்­கள் அமைக்­கப்­படும் என்­றும் இதற்கான நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் அவர் மேலும் தெரிவித்­தார்.