'மஞ்சள் தலைப்பாகை, துப்பட்டாவுடன் வருக'

'மஞ்சள் தலைப்பாகை, துப்பட்டாவுடன் வருக'

1 mins read
11cc58c1-1948-4aa4-81dd-f7727347da6a
கெஜ்ரிவாலுடன் (இடது) பகவந்த் மான். படம்: ஊடகம் -

சண்­டி­கர்: தமது பத­வி­யேற்பு விழா­வுக்கு வரும் ஆண்­கள் மஞ்­சள் நிற 'டர்பனு'ம் பெண்­கள் மஞ்­சள் நிற துப்­பட்­டா­வும் அணிந்து வர வேண்டும் என பஞ்­சாப் மாநி­லத்­தின் புதிய முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்க உள்ள பக­வந்த் மான் கேட்­டுக்கொண்டுள்­ளார்.

இதன் மூலம் பகத்­ சிங் ஊரான கட்­டர்­கா­லனை மஞ்­சள் நிற­மாக மாற்­று­வோம் என்று அவர் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் நடை­பெற்ற பஞ்­சாப் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் யாரும் எதிர்­பா­ராத வகை­யில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது. இதை­ய­டுத்து அக்­கட்­சி­யின் முதல்­வர் வேட்­பா­ள­ரான பக­வந்த் மான் அம்­மா­நில முதல்­வ­ராக நாளை பத­வி­யேற்க உள்­ளார். பத­வி­யேற்பு விழாவை ஆளுநர் மாளி­கை­யில் நடத்­தா­மல், பகத்­சிங்­கின் ஊரான கட்­டர் கால­னில் நடத்த இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­உள்­ளார்.

ஆங்­கி­லே­யர்­களை எதிர்த்­துப் போரா­டிய பகத்­சிங் மஞ்­சள் நிற 'டர்­பன்' அணிந்­தி­ருந்­த­தாக ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் தொடர்ந்து கூறி வரு­கின்­ற­னர். எனவே பதவி­யேற்பு விழா­வின்­போது பகத் ­சிங்­கின் சொந்த ஊர் முழு­வ­தும் மஞ்­சள் நிறம் மட்டுமே தெரிய வேண்­டும் என்று அக்­கட்­சித் தலைமை தொண்­டர்­களுக்கு அறி­வு­றுத்தி உள்­ளது.

நாளை முதல்­வ­ரா­கப் பதவி­யேற்­பதை அடுத்து, தனது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதவி­யில் இருந்துதான் ராஜி­னாமா செய்­வ­தாக பக­வந்த் மான் அறி­வித்துள்ளார்.

"எனது பதவியேற்பு நிகழ்வுக்கு வரும் சகோதரர்களும் சகோதரிகளும் மஞ்சள் நிற டர்பனும் துப்பட்டாவும் அணிந்து வர மறவாதீர்கள்," என்று பகவந்த் மான் கேட்டுக்கொண்டுள்ளார்.