இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை

இரண்டு கவுன்சிலர்கள் சுட்டுக்கொலை

1 mins read
0525957a-7a3a-4279-a62c-8a3a3bcc6b27
-

கோல்­கத்தா: கவுன்சி­லர்­கள் இரு­வர் அடுத்­த­டுத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தால் மேற்கு வங்­கத்­தில் பதற்­றம் நில­வு­கிறது. கொலை­யா­ளி­க­ளுக்கு காவல்­துறை வலை­வீ­சி உள்­ளது.

திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த 48 வய­தான அனு­பம் தத்தா, பன்­னி­ஹாட்டி பகுதி கவுன்­சி­லர் ஆவார்.

நேற்று முன்­தி­னம் மருந்­துக் கடைக்­குச் சென்ற அவர், சில மருந்­து­களை வாங்­கிய பின் வீடு நோக்கி நடந்து வந்­துள்­ளார். அப்­போது இரு­சக்­கர வாக­னம் ஒன்­றில் திடீ­ரென அங்கு வந்த இரு­வர், அனு­பம் தத்­தாவை நோக்கி சர­மா­ரி­யா­கச் சுட்­ட­னர்.

இதில் தலை­யில் படு­காயம் அடைந்த அவர், மருத்­து­வ­மனைக்கு அழைத்துச் செல்­லும் வழி­யி­லேயே உயி­ரி­ழந்­தார்.

இதே­போல் காங்­கி­ரஸ் கட்சியைச் சேர்ந்த 52 வய­தான தபன் காண்டு என்ற கவுன்­சி­ல­ரும் நேற்று முன்­தி­னம் மாலை நடைப்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, இரு சக்­கர வாக­னத்­தில் வந்த இரு­வ­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த குண்­டர்­கள்­தான் தபன் காண்டுவை கொன்­ற­தாக காங்­கி­ரஸ் கட்சி­யி­னர் குற்­றம்­சாட்டி உள்­ள­னர். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை­ய­டுத்து, சம்­ப­வம் நடந்த ஜல்டா, ரகு­நாத்­பூர் நக­ராட்­சி­களில் 12 மணி நேர ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டது.

பொது இடங்­களில் ஐந்து பேருக்கு மேல் கூடி­னால் நட­வ­டிக்கை பாயும் என காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இரு பகு­தி­க­ளி­லும் பதற்­றம் நீடித்து வரு­வ­தா­க­வும் காவல்­துறை தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­வர்­கள் உட­னுக்­கு­டன் கைது செய்­யப்­ப­டு­வதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.