செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
cabd2c96-4631-4b1f-9ae5-89ae28a2f1a1
-

12 - 14 வயதினருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

புதுடெல்லி: நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார். அவர்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயலாஜிக்கல் இவான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. பிள்ளைகள் தடுப்பூசி போடுவதை குடும்பத்தினர் உறுதி செய்யவேண்டும் என்றார் அமைச்சர்.

மேலும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் மீண்டும் போராட்டத்திற்கு அறிவிப்பு

புதுடெல்லி: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் புதுடெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த ஓராண்டு சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்கள் டிராக்டர்களுடன் வந்து போராட்டம் நடத்தின.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும் விளை பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலைக்கு மசோதா கொண்டு வருவது பற்றி குழு அமைக்கப்படும், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது. இதில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 21ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 5 லட்சம் அனைத்துலகப் பயணிகளுக்கு இலவச விசா

யளன: அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் ஐந்து லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கிஷன் கூறினார்.

40 காசுக்காக ரூ.4,000 அபராதம்

யளன: பெங்களூரில் உள்ள உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவகம் தம்மிடம் 40 காசுகள் அதிகமாக வசூலித்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கைத் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, விளம்பரத்திற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக புகார்தாரரை கண்டித்த நீதிபதிகள், உணவகத்தின் முதலாளிக்கு ரூ.2,000மும் நீதிமன்றத்திற்கு ரூ.2,000மும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.