ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தம்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தம்

1 mins read
ce3f26eb-abad-4bc5-849a-cb079de90d73
-

அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளின் கடும் எதிர்ப்­பை­யும் மீறி முதல்­கட்­ட­மாக 30 லட்­சம் பீப்­பாய் கச்சா எண்­ணெய் வாங்க இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

உக்­ரேன் மீது ரஷ்யா பிப்­ர­வரி 24ஆம் தேதி தாக்­கு­தல் தொடங்­கிய பிறகு தற்­போது 40% வரை உயர்ந்­துள்­ளது. உக்­ரேன் மீதான தாக்­கு­த­லுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில் ரஷ்­யா­வி­லி­ருந்து கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­திக்கு தடை விதிப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தது. ரஷ்­யா­வின் அனைத்து கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யை­யும் நிறுத்த இருப்­ப­தாக பிரிட்­டன் அறி­வித்­துள்­ளது. உலக அள­வில் கச்சா எண்­ணெய் ஏற்­று­ம­தி­யில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த நிலை­யில் ரஷ்யா மற்­றும் சவூதி அரே­பியா நாடு­கள் தலா 12% பங்­கு­களைக் கொண்­டுள்­ளன.