கடந்த 15 ஆண்டுகளில் சீன நாட்டவர்கள் 16 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை துணை அமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை (மார்ச் 16) கூறியுள்ளார்.
இந்திய குடியுரிமை பெற சீன நாட்டவர்கள் 10 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் மாநிலங்களவையில் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவில் 2013ல் வசித்த சீன சமூகத்தினரின் எண்ணிக்கை ஏறக்குறைய 2,000ஆக இருந்தது. மும்பையில் சீன மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 4,000ஆக உள்ளது.