பெரும் செல்வந்தர்கள் பெருமளவில் வசிக்கும் இந்தியாவின் மூன்று நகர்கள்

1 mins read
b1e321be-bfe6-4877-a633-094091ec7b4b
படம்: புளூம்பெர்க் -

இந்தியாவிலேயே ஆக அதிகமான பெரும் செல்வந்தர்கள் (billionaires) மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிக்கின்றனர். அங்கு 72 பெரும் செல்வந்தர்கள் இருக்கின்றனர்.

அதற்கு அடுத்த நிலையில், டெல்லியில் 51 பெரும் செல்வந்தர்களும் பெங்களூரில் 28 பெரும் செல்வந்தர்களும் உள்ளனர். 'ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2022' இத்தகவலை வெளியிட்டது.

"செல்வத்தைப் பெருக்கிவரும் குடும்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. சொகுசு பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைய அடுத்த 10 ஆண்டுகள் மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கும்," என்று ஹுருன் இந்தியா நிர்வாக இயக்குநர் அனாஸ் ரஹ்மான் ஜுனைட் கூறினார்.