மேலும் ஒரு காங்கிரஸ் மாநில தலைவர் விலகல்

மேலும் ஒரு காங்கிரஸ் மாநில தலைவர் விலகல்

1 mins read
f0941686-e8ba-4c86-865c-7470646f9e53
-

அமிர்­த­ச­ரஸ்: இந்­தி­யா­வில் அண்மை­யில் நடந்து முடிந்த உத்தரப் பிர­தே­சம், உத்­த­ர­ாகண்ட், மணிப்­பூர், கோவா, பஞ்­சாப் ஆகிய ஐந்து மாநில சட்­ட­ச­பைத் தேர்­தல்­களில் காங்­கி­ரஸ் கட்சி தோற்றது.

இதன் கார­ண­மாக இந்த ஐந்து மாநி­லங்­க­ளின் காங்கி­ரஸ் கட்­சித் தலை­வர்­களும் பதவி வில­கி­விட வேண்­டும் என்று கட்­சித் தலை­வர் சோனியா காந்தி கோரினார்.

இதனை ஏற்று, பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் நவ்­ஜோத் சிங் சித்து நேற்று பதவி வில­கி­னார்.

உத்­த­ரப் பிர­தேச மாநில காங்­கி­ரஸ் தலை­வர் அஜய்­கு­மார் லல்லு, உத்­த­ர­ாகண்ட் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் கணேஷ் கொடி­யால், கோவா காங்­கி­ரஸ் தலை­வர் கிரிஷ் சோடங்­கர் ஆகி­யோர் ஏற்­கெ­னவே வில­கி­விட்­ட­னர்.