புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக் எல்லையில் நடந்த மோதலுக்குப் பின் முதல் முறையாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறின.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அவ்வப்போது பதற்றமும் நிலவி வருகிறது. இதனால் இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றன.
லடாக் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா, சீனா இடையே ராணுவ அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், சீன அமைச்சர் வாங் யீ இந்தியா வர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

