புதுடெல்லி: இந்தியாவில் 2016-2020 வரை நாடு முழுவதும் 14,295 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. திமுக உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய அரசு இவ்வாறு குறிப்பிட்டது.
ரயில்வே தனியார்மயம், மீனவர்கள் பிரச்சினை பற்றி இதர தமிழக உறுப்பினர்கள் மன்றத்தில் நேற்று ஆவேசமாகப் பேசினர்.

