ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு

2 mins read
06c95f0f-5bab-4570-b259-7b644f4b07dc
'ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை' என்று கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் சுவர்களில் எழுதி உள்ளனர். ஹாஸ்பெட் பகுதியில் உள்ள ஒரு சுவரில் எழுதப்பட்டுள்ள 'ஹிஜாப்' என்ற வார்த்தையை மறைக்கும் விதமாக வர்ணம் பூசப்படுகிறது. படம்: ஊடகம் -

புது­டெல்லி: ஹிஜாப் அணியத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தைக் கண்­டித்து கர்­நா­ட­கா­வில் நேற்று முழு அடைப்­புப் போராட்­டம் நடை­பெற்­றது.

இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளின் கூட்­ட­மைப்பு இந்­தப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது.

'ஹிஜாப் என்­பது இஸ்­லா­மிய சட்­டத்­தில் அத்­தி­யா­வ­சி­ய­மான விஷ­ய­மல்ல. எனவே கல்வி நிலை­யங்­களில் ஹிஜாப்­புக்கு கர்­நா­டக அரசு விதித்த தடை செல்­லும்' என அம்­மா­நில உயர் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

இதை எதிர்த்து இஸ்­லா­மிய அமைப்­பி­னர் கர்­நா­ட­கா­வின் சில பகு­தி­களில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், மாநி­லம் தழு­விய அள­வில் நேற்று முழு அடைப்பு போராட்­டத்தை இஸ்­லாமிய அமைப்பு­க­ளின் கூட்­ட­மைப்பு நடத்­தி­யது. இதன் கார­ண­மாக மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கடை­கள் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தனி­யார் நிறு­வ­னங்­கள் செயல்­ப­ட­வில்லை. சில பகு­தி­களில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்டது. உடுப்பி, உத்தர கன்னடா, தட்சின கன்னடா, தார்வார், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற மாவட்டங்களில் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்­லூ­ரி­களில் மாணவி­கள் ஹிஜாப் அணிந்து செல்ல அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் உயர் நீதி­மன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்­டும் என்­றும் இஸ்­லா­மிய அமைப்­பு­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

இதற்­கி­டையே ஹிஜாப் வழக்கில் கர்­நா­டக உயர் ­நீ­தி­மன்ற உத்­த­ரவை எதிர்த்து முஸ்­லிம் மாண­வி­கள் உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­முறையீடு மனு­தாக்­கல் செய்­துள்­ள­னர். இந்த மனுவை அவ­சர வழக்­காக விசா­ரிக்க மறுத்த உச்­ச­ நீ­தி­மன்­றம் ஹோலி விடு­மு­றைக்குப் பிறகு விசா­ரணை நடத்­து­வ­தாக தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லை­யில் முழு அடைப்­புப் போராட்­டத்தை அடுத்து கர்­நா­டக காவல்­துறை, மாநி­லம் முழு­வ­தும் நேற்று பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருந்­தது.