படித்த இளையர், பெண்களுக்கு அதிக வாய்ப்பு: மோடியின் 25 ஆண்டுக்காலத் திட்டம்

படித்த இளையர், பெண்களுக்கு அதிக வாய்ப்பு: மோடியின் 25 ஆண்டுக்காலத் திட்டம்

1 mins read
1068bedd-fc9b-4283-9c86-4777553d4124
-

புது­டெல்லி: பாஜ­க­வில் இனி படித்த இளை­யர்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் அதிக வாய்ப்­பு­களை வழங்க பிர­த­மர் மோடி முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதன் அடிப்­ப­டை­யில், அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு பாஜ­கவை அசைக்க முடி­யாத சக்­தி­யாக உரு­வாக்க அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தாக என்­டி­டிவி ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­களில் பாஜக நான்கு மாநி­லங்­களில் வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது. எனி­னும் அம்­மா­நிலங்­களில் இன்­னும் பத­வி­யேற்பு விழா நடை­பெ­ற­வில்லை.

இம்­முறை மா­நில அமைச்­சரவை­களில் படித்த இளை­ஞர்­களை­யும் பெண்­க­ளை­யும் அதிக எண்­ணிக்­கை­யில் இடம்­பெ­றச் செய்ய பிர­த­மர் மோடி விரும்­பு­வதா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தா­யத்­தைச் சார்ந்த எம்­எல்­ஏக்­க­ளுக்கு மாநில அமைச்­ச­ர­வை­யில் உரிய பிர­தி­நி­தித்­து­வம் வழங்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­காக வெற்­றி­பெற்ற எம்எல்­ஏக்­க­ளைப் பற்­றிய அனைத்து விவ­ரங்­க­ளை­யும் மாநி­லத் தலை­மை­யிடம் கேட்­டுப் பெற்­றுள்­ளது பாஜக தலைமை.

மோடி தலை­மை­யி­லான குழு­வி­னர், அவற்­றைப் பரி­சீ­லித்த பிறகு புதிய அமைச்­ச­ரவை குறித்த அறி­விப்பு வெளி­யா­கும் எனக் கூறப்­படு­கிறது.

இதன் மூலம் அடுத்த தலை­முறைத் தலை­வர்­களை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தும் அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு பாஜ­கவை தேசிய அள­வில் பல­மான கட்­சி­யாக உரு­மாற்ற வேண்­டும் என்­ப­தும்­தான் பிர­த­மர் மோடி­யின் திட்­டம் என ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.