45 நாள்களில் கட்டப்பட்ட ஏழு மாடி ராணுவ ஆய்வுக் கட்டடம்

45 நாள்களில் கட்டப்பட்ட ஏழு மாடி ராணுவ ஆய்வுக் கட்டடம்

1 mins read
a92c8d33-156c-4145-a4af-8afec64732a7
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ராணுவ ஆய்வுக்காக நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 45 நாள்களில் கட்டி முடிக்கப்பட்ட ஏழு மாடிக் கட்டடம். படம்: இணையம் -

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வின் தற்­காப்பு ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுக் கழ­கம்(டிஆர்­டிஓ), உள்­நாட்­டில் உரு­வாக்­கப்­பட்ட ஹைபி­ரிட் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி பெங்­க­ளூ­ரு­வில் ஏழு மாடிக் கட்­ட­டத்தை 45 நாட்­களில் கட்டி முடித்­துள்­ளது.

மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் இந்­தக் கட்­ட­டத்தை நேற்று முன்­தி­னம் திறந்து வைத்­தார்.

''உள்­நாட்டுப் போர் விமா­னத் தயா­ரிப்­புக்­காக மிகக் குறு­கிய காலத்­தில் அதே­நே­ரம் மிகப் பெரிய அள­வி­லான கட்­ட­டத்தை டிஆர்­டிஓ அதி­கா­ரி­கள் கட்டி முடித்­தி­ருப்­பது பெரு­மைக்கு உரிய சாதனை,'' என்­றார் அவர்.

ஹைபி­ரிட் கட்­டு­மா­னத் தொழில்­நுட்­பத்­தில் இவ்­வ­ளவு குறைந்த காலத்­தில் நிரந்­த­ரக் கட்­ட­டம் ஒன்றை எழுப்­பி­யி­ருப்­பது இதுவே முதல்­முறை என்று டிஆர்­டிஓ அதி­கா­ரி­கள் கூறி­னர்.

புதிய கட்­ட­டம், நகர்த்­து­வ­தற்­கும் ஏது­வா­கக் கட்­டப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் கட்­டு­மா­னத் துறை வர­லாற்­றில் இது சிறப்­பி­டம் பெறு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

ஐந்­தாம் தலை­முறை மேம்­பட்ட உள்­நாட்­டுப் போர் விமா­னங்­க­ளின் தயா­ரிப்பு, ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுப் பணி­கள் இந்­தக் கட்­ட­டத்­தில் மேற்­கொள்­ளப்­படும் என்று தற்­காப்பு ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுக் கழ­க அதிகாரிகள் தெரி­வித்துதனர்.