ஊழல் புகாருக்கு பஞ்சாப் முதல்வரின் புதிய உத்தி

ஊழல் புகாருக்கு பஞ்சாப் முதல்வரின் புதிய உத்தி

1 mins read
bb6f6536-132e-4024-9828-2ffb747556cd
பஞ்சாபின் புதிய முதல்வராக பகவந்த் மான், மார்ச் 16ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். படம்: இணையம் -

அமிர்­த­ச­ரஸ்: பஞ்­சாப் மாநி­லத் தேர்­த­லில் அபார வெற்றி பெற்று முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­றுள்ள ஆம் ஆத்மி கட்­சி­யின் திரு பக­வந்த் மான், ஊழ­லுக்கு எதி­ரா­கப் புகார் தெரி­விக்க தொலை­பேசி எண் அறி­விக்­கப்­படும் என்­றும் அந்த எண்­ணில் 'வாட்ஸ்­அப்' மூலம் தம்­மி­டம் தொடர்­பு­கொள்­ள­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளார். நேற்று முன்தினம் டுவிட்­ட­ரில் அவர் அவ்­வாறு பதி­விட்­டார்.

"மக்­களில் 99% பேர் நேர்­மை­யா­ன­வர்­கள். மீதி­யுள்ள ஒரு விழுக்­காட்­டி­ன­ரால் நாட்­டின் அமைப்­பு­முறை சிதை­கிறது,' என்று கூறிய அவர், பகத்­சிங் நினை­வு­நா­ளான மார்ச் 23ஆம் தேதி, ஊழ­லுக்கு எதி­ரா­கப் புகார்­க­ளைத் தெரி­விப்­ப­தற்­கான தொலை­பேசி எண் அறி­விக்­கப்­படும் என்­றார்.

"அது எனது தனிப்­பட்ட வாட்ஸ்­அப் எண். உங்­க­ளி­டம் யாரா­வது லஞ்­சம் கேட்­டால் அது குறித்து வீடியோ அல்­லது ஆடியோ பதி­வு­களை எனக்கு அனுப்­புங்­கள். ஊழல் செய்­ப­வர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். பஞ்­சா­பில் இனி ஊழ­லுக்கு இட­மில்லை," என்­றார் புதிய முதல்­வர்.

இந்­நி­லை­யில், டெல்லி முதல்­வ­ரும் ஆம் ஆத்மி கட்­சி­யின் தலை­வ­ரு­மான திரு அர்­விந்த் கெஜ்­ரி­வால், பஞ்­சாப் முதல்­வர் பக­வந்த் மான் எடுக்­கும் நட­வ­டிக்­கை­யைப் பாராட்­டி­ய­து­டன் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.