புதுடெல்லி: இந்தியக் கடற்படை, நீருக்கடியிலான அதன் தற்காப்புத் திறனை உயர்த்துவதில் முனைந்துள்ளதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்வெளியைப் போலவே தண்ணீருக்கு அடியிலும் போர் மூளுவதற்கான சாத்தியங்களைக் கருத்தில்கொண்டு அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆளில்லா வானூர்திகள், நீருக்கடியில் பயணம் செய்யும் ஆளில்லா வாகனங்கள், நீருக்கடியில் நிகழும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் என மூன்று முக்கிய அம்சங்களில் இந்தியக் கடற்படை கவனம் செலுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

