இந்தியாவில் US42 மில்லியன் டாலர் ஜப்பான் முதலீடு

இந்தியாவில் US42 மில்லியன் டாலர் ஜப்பான் முதலீடு

1 mins read
f85a3954-aa89-470c-bba0-21250109d005
-
multi-img1 of 2

புதுடில்லியில் ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை (மார்ச் 19) அதிகாரபூர்வமாகச் சந்தித்தார்.

ஜப்பான், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் US42 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பொது உள்ளமைப்புத் திட்டங்கள் போன்றவற்றில் ஜப்பான் முதலீடு செய்யும்.

இந்தியா- ஜப்பான் இடையிலான 14ஆவது மாநாட்டில் இரு தரப்பு தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு திரு. கிஷிடா இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது.

ஜப்பான்-இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் இதனால் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ர‌ஷ்ய-உக்ரேன் போரில் அமைதிவழி தீர்வு கொண்டுவர வேண்டும் என்று இருநாட்டுத் தலைவர்கள் கூறினர்.