"இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியது ஏன் என சீனா இன்னும் விளக்கவில்லை" இந்தியா: சீனாவுடன் தற்போது இயல்பான உறவு இல்லை

"இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியது ஏன் என சீனா இன்னும் விளக்கவில்லை" இந்தியா: சீனாவுடன் தற்போது இயல்பான உறவு இல்லை

2 mins read
7277c467-cee1-49b1-be04-b57620421b66
-

சென்னை: லடாக் உள்­ளிட்ட எல்­லைப் பகு­தி­களில் இருந்து சீனா தனது ராணுவத் துருப்­பு­களை முழு­மை­யா­கத் திரும்­பப் பெறும் வரை அந்நாட்டுடன் வழக்­க­மான நல்­லு­ற­வைப் பேண வாய்ப்­பில்லை என இந்­தியா திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்திய வெளி­யு­ற­வுச் செய­லர் ஹர்ஷ் ஷ்ரிங்லா, இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான ஒப்­பந்­தங்­களை மீறி­ய­தற்­கான கார­ணத்தை சீனா இது­வரை தெரி­விக்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட ஜப்­பான் பிர­த­மர் புமியோ கிஷி­டா­வு­டன் பிர­த­மர் மோடி நடத்­திய பேச்­சு­வார்த்­தை­யின்­போது, சீனா­வு­ட­னான எல்­லைப் பிரச்­சினை குறித்­தும் விவா­திக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

"இதை­ய­டுத்து, கிழக்கு, தென் சீனக் கடல் விவ­கா­ரங்­களில் ஜப்­பானின் நிலை­ப்பாடு குறித்து பிர­த­மர் மோடி­யிடம் ஜப்­பான் பிர­த­மர் விவ­ரித்­தார்.

"இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான பாது­காப்­புத்­துறை சார்ந்த ஒத்­து­ழைப்­பில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

"மேலும் இரு நாடு­களும் இந்தோ பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் கடல்­சார் பாது­காப்­பில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் என்­றும் இந்­தியா விரும்­பு­வ­தாக மோடி கூறி­னார்," என்று ஹர்ஷ் ஷ்ரிங்லா செய்­தி­யா­ளர்­களிடம் தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து, இரு நாடு­களும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில், கடல்­சார் பாது­காப்பு உள்­ளிட்ட ஒத்­து­ழைப்­புக்­கான நடை­மு­றை­களை எளி­தாக்­க வேண்டும் என்று இரு தலை­வர்­களும் மீண்­டும் ஒப்புக்கொண்டதாக குறிப்­பி­டப்­பட்­டுள்ளது.

"லடாக் எல்­லைப் பகு­தி­யின் தற்­போ­தைய சூழல் குறித்து ஜப்­பா­னி­டம் விரி­வாக விவ­ரிக்­கப்­பட்­டது. அங்கு துருப்­புக்­கள் குவிக்­கப்­படு­வது, அவ்­வப்­போது நடக்­கும் ஊடு­ரு­வல் முயற்­சி­கள் குறித்­தும் விளக்­கப்­பட்­டது.

"இந்த விவ­கா­ரங்­க­ளுக்கு உரிய தீர்­வு­கள் காணப்­பட வேண்­டும் என்­றும் அது­வரை சீனா­வு­ட­னான உற­வு­கள் இயல்­பாக இருப்­ப­தாக கருத வாய்ப்பே இல்லை என்­றும் ஜப்­பா­னி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

"எனவே, தற்­போது விவா­திக்­கப்­படும் விஷ­யங்கள் தொடர்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய முன்­னேற்­றங்­க­ளைப் பொறுத்தே இரு நாடு­க­ளின் உறவு­ இயல்­பு­ நி­லைக்­குத் திரும்­பு­வது உறு­தி­யா­கும்," என்­றும் ஹர்ஷ் ஷ்ரிங்லா மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, விரை­வில் நடை­பெற உள்ள பிரிக்ஸ் மாநாட்­டின்­போது பிர­த­மர் மோடிக்கு விருந்து அளிக்க சீனா ஆர்­வம் கொண்­டுள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அம்­மா­நாட்­டில் ரஷ்ய அதி­பர் புட்­டி­னும் பங்­கேற்­கி­றார்.

இந்­நி­லை­யில் சீனா, ரஷ்யா, இந்­தியா ஆகிய மூன்று நாடு­க­ளைக் கொண்டு முத்­த­ரப்பு மாநாட்டை நடத்த வேண்­டும் என்­றும் சீனா விருப்­பம் கொண்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்நாடு சத்தமின்றி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனி­னும், லடாக் எல்­லைப் பிரச்­சி­னைக்­கு முழுமையான தீர்வு காணப்­படும் வரை சீன அதி­பரை நேரில் சந்­தித்துப் பேசுவதை பிர­தமர் மோடி விரும்­ப­வில்லை என்­றும் ஊட­கத் தக­வல் ஒன்று தெரி­விக்­கிறது.