மும்பை: மகாராஷ்டிராவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யுனிகார்ன் நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது.
அப்போது, கணக்கில் காட்டப்படாத 224 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கணக்கில் வராத ஒரு கோடி ரொக்கப்பணம், 22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிராவில் தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் அந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

