இந்தியாவுக்குச் சொந்தமான அரிய கலைப்பொருள்களை ஆஸ்திரேலியா திருப்பிக்கொடுத்ததற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இருநாட்டுப் பிரதமர்களிடையே நடந்த இணைய வழி கூட்டத்தில் திரு மோடி திரு ஸ்காட் மோரிசனுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
மதம், கலாசாரம் சம்பந்தப்பட்ட 29 கலைப்பொருள்களை ஆஸ்திரேலியா திருப்பித் தந்துள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமையான சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுருள் ஆகியவை ஆஸ்திரேலிய தேசியக் காட்சி கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து திருடப்பட்டவை அல்லது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டவை.
ஆண்டுதோறும் இந்தியக் கோவில்களிலிருந்து ஆயிரக்கணக்கான கலைப்பொருள்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.
அப்படி கடத்தப்படும் பொருள்களைத் திருப்பி இந்தியாவுக்கு அனுப்புமாறு மேற்கத்திய நாடுகளை இந்திய அரசாங்கம் வலியுறுத்திவருகிறது.

