உக்ரேன், ரஷ்யா மோதல்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது ‘குவாட்’

புது­டெல்லி: உக்­ரேன், ரஷ்யா இடை­யே­யான மோதல் தொடர்­பில் இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை குவாட் அமைப்பு நாடு­கள் ஏற்றுக்­கொண்­ட­தாக ஆஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை மதிப்­ப­தா­க­வும் அதை ஏற்­றுக்­கொள்­வ­தா­க­வும் இந்­தி­யா­விற்­கான ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தூதர் பேரி ஓஃபேரல் கூறி­யுள்­ளார்.

எல்லா நாடு­க­ளின் உற­வும் ஒரே மாதிரி இருக்க வேண்­டிய அவசியம் இல்லை என்­றும் வெளி­யு­ற­வுக் கொள்கை என்­பது ஒவ்வொரு நாட்­டுக்­கும் மாறு­பட்டு இருப்­பது இயல்­பு­தான் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"உக்­ரேன் மீதான போர் உடனடி­யாக நிறுத்­தப்­பட வேண்­டும் என்று இந்­தி­யப் பிர­த­மர் மோடி ஏற்­கெ­னவே கூறி­விட்­டார். அதோடு தனது நட்­பு­களை பயன்­ப­டுத்தி போரை நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்­டார்," என்று பேரி ஓஃபேரல் சுட்­டிக்­காட்­டி­னார்.

இந்­தியா இது­வரை செய்­துள்ளவை நல்ல விஷ­யம்­தான் என்­றும் இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை எதிர்க்க வேண்­டிய அவசியம் எழ­வில்லை என்­றும் அவர் தெரி­வித்தார்.

முன்­ன­தாக இந்­தி­யா­வின் நிலைப்­பாடு தொடர்­பாக அமெரிக்கா கருத்து தெரி­விக்­கை­யில், இந்தியா­வின் செயல்­பாடு அமெ­ரிக்க விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­ன­தல்ல என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

எனி­னும் வர­லாற்­றின் தவ­றான பக்­கத்­தில் இந்­தியா நின்­று­வி­டக்­கூ­டாது என வெள்ளை மாளிகை கூறி­யி­ருந்­தது.

குவாட் என்­பது இந்­தியா, ஆஸ்தி­ரே­லியா, ஜப்­பான், அமெரிக்கா ஆகிய நாடு­க­ளைக் கொண்ட கூட்­ட­மைப்பு ஆகும்.கடல்­சார் துறை சார்ந்த பாதுகாப்பு, ஒத்­து­ழைப்பு உள்­ளிட்ட நட­வடிக்கை­களுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அமைப்பு இது.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­தி­ருப்­ப­தற்கு குவாட் அமைப்­பில் உள்ள மற்ற மூன்று நாடு­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்­தியா மட்­டுமே ரஷ்­யா­வுக்கு எதி­ராக ஏதும் கூற­வில்லை.

ஆஸ்­தி­ரே­லி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் ரஷ்­யா­விற்கு எதி­ராக கடும் பொரு­ளா­தாரத் தடைகளை விதித்து உள்ள போதி­லும், இந்தியா உக்­ரேனை ஆதரிக்­க­வில்லை. மாறாக நடு­நிலை வகிப்­ப­தா­கக் கூறி­யுள்­ளது.

மேலும், ரஷ்­யா­வி­டம் இருந்து குறைந்த விலை­யில் கச்சா எண்­ணெய் வாங்­கு­வ­தா­க­வும் அறிவித்தது.

இத­னால் குவாட் அமைப்பு சிதைந்­து­போ­கும் என்று ஒரு தரப்­பி­னர் கரு­தி­னர்.

ஆனால் திடீர்த் திருப்­ப­மாக உக்­ரேன் போரில் இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை குவாட் நாடு­கள் ஏற்­றுக்­கொண்­ட­தாக ஆஸ்­தி­ரேலியா தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!