உக்ரேனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீனின் உடல் நேற்று பெங்களூரு வந்தடைந்தது.
விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மரியாதை செலுத்திய பின்னர், சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.நவீனின் உடல் மருத்துவக் கல்விப் பயன்பாட்டிற்கு தானமாக வழங்கப்படுகிறது. படம்: இபிஏ

