திருப்பதி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்படும் என்று மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
"75வது சுதந்திர தினத்தை 'ஆஜாதி கா அமித் மகோற்சவம்' என்ற பெயரில் ஓராண்டுக்கு கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்வரும், ஏப்ரல் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
"75வது சுதந்திர தினம் நிறைவு பெறக்கூடிய நாளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது," என்றார் அமைச்சர் கிஷன்.
மேலும், எதிர்வரும் ஜூன் 21ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடக்கும் யோகா விழாவில் சுமார் 250 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

