சிறைக் கைதிகளுக்கு கோவில் அர்ச்சகராகும் பயிற்சி

சிறைக் கைதிகளுக்கு கோவில் அர்ச்சகராகும் பயிற்சி

2 mins read
2cee2c8a-27fd-44de-af56-523834c327c5
-

போபால்: கொடூ­ர குற்­றங்­களுக்­காக சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் கைதி­க­ளுக்கு மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தின் போபால் சிறை­யில் கோவில் அர்ச்­ச­கர் ஆவ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இதன் மூலம் அக்­கை­தி­கள் கௌர­வ­மான மறு­வாழ்­வுக்­குத் தயா­ராகி வரு­வ­தாக இந்­தப் பயிற்­சியை அளிக்­கும் காயத்ரி சக்­தி­பீத் என்ற அமைப்பு தெரி­வி­த்­துள்­ளது.

இந்த அமைப்­பின் உறுப்­பி­னர்­கள் முதற்­கட்­ட­மாக போபால் மத்­திய சிறை­யில் உள்ள கைதி­களை நேரில் சந்­தித்­துப் பேசி மன­நல ஆலோ­ச­னை­கள் வழங்­கு­கின்­ற­னர். அதன் பின்­னர் கைதி­க­ளின் மறு­வாழ்­வுக்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

வேத சடங்­கு­களில் ஆர்­வம் உள்ள, சமு­தா­யத்­து­டன் இணைந்து வாழும் விருப்­பம் உள்ள கைதி­கள் மட்­டும் அர்ச்­சகர் பயிற்­சிக்கு தேர்வு செய்­யப்­ப­டு­கின்­ற­னர்.

துவக்க நிலை­யில் மாதத்­திற்கு ஐம்­பது கைதி­கள் தேர்வு செய்­யப்­பட்டு, 'யுக் புரோ­ஹித்' என்ற அர்ச்­ச­க­ருக்­கான பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

"இதன் மூலம் சிறைக் கைதி­க­ளாக தண்­ட­னையை அனு­ப­வித்த அவர்­கள், விடு­தலை பெற்று வெளியே சென்­ற­தும் மனி­தா­பி­மா­னத்­து­டன் செயல்­பட முடி­யும். பிற­ரைக் கவ­னித்­துக்­கொள்­வ­து­தான் 'புரோ­ஹித்' என்­ப­தன் அர்த்­தம்," என்­கி­றார்­கள் காயத்ரி சக்­தி­பீத் அமைப்­பி­னர்.

சிறைக் கைதி­கள் மன அழுத்­தத்­துக்கு ஆட்­ப­டு­வர் என்­றும் ஐம்­பது கைதி­களை தேர்வு செய்து பயிற்சி வழங்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது என்­றும் போபால் மத்­திய சிறைக் கண்­கா­ணிப்­பா­ளர் தினேஷ் நர்­காவே தெரி­வித்­துள்­ளார்.

"பயிற்சி பெறு­ப­வர்­களில் பெரும்­பா­லோர் ஏழை­கள், சுமா­ராக படித்­த­வர்­கள் அல்­லது அதி­கம் படிக்­கா­த­வர்­கள். மேலும் கற்­க­வேண்­டும் என்ற ஆர்­வம் உள்­ள­வர்­க­ளுக்கு இப்­ப­யிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது," என்­றார் அவர்.

கொலைக் குற்­றத்­துக்­காக தண்­டனை அனு­ப­வித்து வரும் சந்­தீப் பவார் என்­ப­வ­ரும் அர்ச்­ச­கர் பயிற்சி பெற்று வரு­கி­றார். மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தமக்கு இந்­தப் பயிற்­சி­யின் மூலம் மன­தில் அமைதி ஏற்­பட்­டுள்­ளது என்று அவர் கூறி­யுள்­ளார்.

"என்­னைப் போல பல­ருக்­கும் ஆன்­மீ­கக் கல்வி, சடங்­கு­க­ளு­டன் அன்பு, தோழமை ஆகிய நற்­பண்­பு­க­ளைப் பிர­சா­ரம் செய்ய கற்­றுக் கொடுக்­கப்­ப­டு­கிறது. முன்பு நாங்­கள் மன அழுத்­தத்­திற்கு ஆளா­கி­யி­ருந்­தோம்,

"ஆனால் பயிற்­சிக்­குப் பிறகு, ஒரு­வித அமை­தி­யான உணர்வு ஏற்­பட்­டுள்­ளது. மேலும் சமூ­கத்­தில் நாமும் ஓர் அங்­கம் என்ற உணர்­வும் ஏற்­ப­ட்டுள்­ளது. நான் முன்னைவிட இப்போது மிக­வும் நன்­றாக உணர்­கி­றேன்'," என்­கி­றார் சந்­தீப் பவார்.