பத்தே நிமிடங்களில் உணவு விநியோகம்; ஸொமாட்டோவுக்கு எதிர்ப்புக் குரல்

பத்தே நிமிடங்களில் உணவு விநியோகம்; ஸொமாட்டோவுக்கு எதிர்ப்புக் குரல்

1 mins read
235a8b53-8f13-44e6-91ee-b85140ef8b0c
வாடிக்கையாளர்களிடம் உணவை விநியோகிக்கும் அவசரத்தில் ஓட்டுநர்கள் சாலை விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகரிக்கும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆர்டர் கிடைத்து பத்தே நிமிடங்களில் வாடிக்கையாளர்களிடம் உணவை விநியோகிக்க திட்டம் அறிவித்துள்ள இந்திய உணவு விநியோக நிறுவனமான ஸொமாட்டோவுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

வாடிக்கையாளர்களிடம் உணவை விநியோகிக்கும் அவசரத்தில் ஓட்டுநர்கள் சாலை விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகரிக்கும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

அவசர நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கே இந்தியாவில் நேரம் எடுக்கும் வேளையில், வாடிக்கையாளர்களிடம் உணவை விநியோகிப்பதில் எதற்கு அவசரம் என சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.

"உயிரைப் பணயம் வைத்து ஒருவர் என்னிடம் விநியோகம் செய்யும் உணவை நான் சாப்பிட மாட்டேன்," என்று குஞ்சன் ராஸ்டோகி என்பவர் பதிவிட்டார்.