புதுடெல்லி: இந்தியா முழுவதும் புதிதாக கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளியிடப்பட்டன.
ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோடபர் 24ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்தனர்.
4வது கிருமித்தொற்று அலை தோன்றுவதற்கான சாத்தியங்கள் பற்றி நிபுணர்கள் கூறி வரும் சூழலில், இந்தியாவில் ஓமிக்ரான் அச்சுறுத்தல் இன்னும் நீங்கிவிடவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், "உலகம் முழு
வதும் 99 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை நாம் வழங்கி இருக்கிறோம்.
"145 நாட்களில் 25 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி முடித்துள்ளோம்.
"இதுவரை 181 கோடி தடுப்
பூசிகள் போடப்பட்டுள்ளன என்
பதைத் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். எனினும், ஓமிக்ரான் அச்சுறுத்தல் நாட்டில் இருந்து நீங்கிவிடவில்லை," என்றார்.

