சண்டிகர்: இந்தியாவின் விடு தலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பகத் சிங் நினைவு தினம் இன்று (மார்ச் 23) அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு தினத்தை அரசு விடு முறையாக அறிவித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தர விட்டுள்ளார். மேலும், பகத் சிங், அம்பேத்கர் ஆகியோருக்கு சட்டமன்ற வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ெவன்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அக்கட்சி சார்பில் முதல்வராக பகவந்த் மான் கடந்த வாரம் பதவி ஏற்றார்.
பகத் சிங்கிற்கு பஞ்சாப் அரசு கௌரவம்
1 mins read
-

