$400 பி. மதிப்புள்ள சரக்கு ஏற்றுமதி; இந்தியா சாதனை

$400 பி. மதிப்புள்ள சரக்கு ஏற்றுமதி; இந்தியா சாதனை

2 mins read
d225cc9f-9bc1-4586-a34a-992d88704ca2
இந்தியா, ஏற்றுமதியில் சாதனைப் படைத்துள்ள வேளையில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசின் இளையர் பிரிவினர் நேற்று பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தியா, இது­வரை இல்­லாத அள­வுக்கு ஏற்­று­ம­தி­யில் சாத­னைப் படைத்­துள்­ளது.

முதன்­மு­றை­யாக 400 பில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள சரக்­கு­களை அது ஏற்­று­மதி செய்­துள்ளது.

இதனை பிர­த­மர் மோடி பெரு­மை­யு­டன் தனது செய்­தி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"400 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் சரக்கு ஏற்­று­மதி என்ற இலக்கை இந்­தியா முதன்­மு­றை­யாக எட்டி சாத­னைப் படைத்­துள்­ளது," என்று பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

இந்த நிதி­யாண்­டில் 650 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­புள்ள பொருட்­களை ஏற்­று­மதி செய்ய இந்­தியா இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­தது. இதில் 250 பில்­லி­யன் டாலர் ஏற்­று­மதி சேவைத் துறை­யைச் சேர்ந்­தவை.

நடப்பு ஆண்­டில் இந்­தி­யா­வின் ஏற்­று­மதி இலக்கை தாண்­டி­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏப்­ரல் முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் இந்­தி­யா­வின் ஏற்­று­மதி 300 பில்­லி­யன் டாலராக இருந்தது.

ஓமிக்­ரான் தொற்­றுப் பிரச்­சினை உச்­சக்­கட்­டத்­தில் இருந்த டிசம்­ப­ரிலும் 37 பில்­லி­யன் டாலர் மதிப்­புள்ள சரக்குகள் ஏற்­று­மதி செய்யப்­ பட்­டன என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் பியூஷ் கோயல் கடந்த ஜன­வ­ரி­யில் கூறி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில் இந்­தி­யா­வின் ஏற்­று­மதி தற்­போது புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

"இந்­தி­யா­வின் ஏற்­று­மதி சாத­னைக்கு பேரு­தவி செய்த விவ­சா­யி­கள், நெச­வா­ளர்­க­ளுக்கு நன்றி. இந்­தி­யா­வின் ஏற்­று­மதி சாத­னைக்கு பேரு­தவி புரிந்த சிறு,குறு தொழில் நிறு­வ­னங்­கள், உற்­பத்­தி­யா­ளர்­ களுக்­கு நன்றி. இந்­தி­யா­வின் ஏற்று­மதி சாத­னைக்கு பேரு­தவி புரிந்த ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்­கும் நன்றி. 'சுய­சார்பு இந்­தியா' என்ற இலக்­கு­டன்கூடிய இந்­தி­யா­வின் பய­ணத்­திற்கு ஏற்­று­மதி சாதனை முக்­கிய மைல்­கல்­லாக அமைந்­துள்­ளது," என்று தமது செய்­தி­யில் திரு மோடி கூறியுள்ளார்.