புதுெடல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இம்மாதம் 25ஆம் தேதி (நாளை) இந்தியா வருகிறார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020ல் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமை யான மோதல் ஏற்பட்டது. இதை யடுத்து இரு தரப்பு உறவில் விரி சல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் திரு வாங் யி இந்தியாவுக்கு வருகையளிப் பதாக அவரது வருகையை நன்கு அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை அவர் சந்திப்பார் என்று அந்த வட்டாரத்தின் அதி காரி ஒருவர் கூறினார்.
உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் எல்லைப் பிரச்சினை குறித்து அவர்கள் பேசலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
ஆனால் திரு வாங் யியின் வருகையை இந்தியாவோ சீனாவோ நேற்று மாலை வரை அதிகாரபூர்வ மாக உறுதிப்படுத்தவில்லை.
உக்ரேன் மீது ரஷ்யா படை யெடுத்ததை இந்தியாவும் சீனாவும் ஆதரிக்கவில்லை. அதே சமயத் தில் இரு நாடுகளும் ரஷ்யாவை இதுவரை கண்டிக்கவில்லை.

