12 முதல் 17 வயது சிறார்களுக்கு தடுப்பூசி; புதிய மருந்துக்கு அவசரகால அனுமதி

12 முதல் 17 வயது சிறார்களுக்கு தடுப்பூசி; புதிய மருந்துக்கு அவசரகால அனுமதி

1 mins read
b7a2b29e-07ea-4d15-9aff-25a81fc38db9
4வது தடுப்பூசியாக நோவாவேக்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஏற்­கெ­னவே கொவி­ஷீல்ட், கோவேக்­சின், ஸ்புட்­னிக் ஆகிய தடுப்­பூ­சி­கள் கொேரானா­வுக்கு எதி­ராக பயன்­ ப­டுத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் தடுப்­பூ­சிக்­கான தேவை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இதன் கார­ண­மாக மேலும் சில தடுப்­பூ­சி­க­ளுக்கு இந்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. தற்போது 12 முதல் 17 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கும் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. இந்த நிலை­யில் இந்த வய­தில் உள்­ள­வர்­க­ளுக்கு நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சியை ேபாட இந்திய அரசு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கிறது.

அவ­ச­ர­கால பயன்­பாட்டை கருத்­தில் கொண்டு மத்­திய அரசு இந்த அனு­ம­தியை வழங்கியுள்­ளது.

வெளி­நாட்­டில் கண்­டு­பி­டிக்கப் பட்ட இந்­தத் தடுப்­பூசியை இந்­தி­யா­வில் உள்ள சீரம் இன்ஸ்­டி­டி­யூட் தயா­ரித்து விநி­யோ­கிக்­கும் உரி­மை­யைப் பெற்­றுள்­ளது.

இதற்கு முன்பு நோவா­வேக்ஸ் தடுப்­பூசி பல்­வேறு கட்­டங்­க­ளாக ஆய்வு செய்­யப்­பட்­டது.

பன்­னி­ரண்டு முதல் 17 வய­துக்கு­உட்­பட்டவர்­க­ளுக்கு 'நோவாவேக்ஸ்' செலுத்தி நடத்தப்­பட்ட ஆய்­வில் 80 விழுக்­காடு வெற்றி கிடைத்­தது.

இதை­ய­டுத்து சிறார்­க­ளுக்கு நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சியை போட மத்­திய அரசு அவ­ச­ர­கால அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

பன்­னி­ரண்டு வய­துக்கு மேல் தடுப்­பூசி போட மூன்று தடுப்­பூசி களுக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

பயோ­லா­ஜி­கல் இ'ஸ் கோர்­பி­வேக்ஸ், ஸைடஸ் கேடில்­லா­வின் ஸைகோவி-டி, பாரத் பயோ­டெக்­கின் கோவேக்­ஸின் ஆகி­யவை அவை.

நோவா­வேக்ஸ் அனு­மதி பெற்று உள்ள நான்­கா­வது தடுப்­பூசி ஆகும்.