தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலி

தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலி

2 mins read
754592ae-e989-4280-80ae-8e29260fc873
கருகிய உடல்களை தீ அணைப்பாளர்களும் காவல்துறையினரும் வெளியே கொண்டு வந்தனர்.கிடங்கில் தீ மூண்டபோது 11 தொழிலாளர்களும் உறங்கிக் கொண்டிருந்தனர். படம்: ஏஎஃப்பி -

ஹைத­ரா­பாத்: தெலுங்­கா­னா­வில் உள்ள ஹைத­ரா­பாத் நக­ரில் நிகழ்ந்த மிக மோச­மான தீ விபத்­தில் பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த தொழிலாளர்­கள் உடல் கருகி மாண்­ட­னர். போய்­குடா பகு­தி­யில் உள்ள ஒரு கடை­யின் மரக்கிடங்­கில் நேற்று அதி­காலை 4 மணி­ய­ள­வில் தீ விபத்து ஏற்­பட்­டது.

இந்த கடை­யின் கிடங்­கில் எளி­தில் தீப்­பற்­றக்­கூ­டிய பொருட்­கள் நிறைய இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் தீ மள­ம­ள­வென பர­வி­யது.

அதே கடை­யில் வேலை செய்து வரும் பீகார் மாநில தொழி­லா­ளர்­கள் 12 பேர் கிடங்­கில் தங்கி வந்­த­னர்.

அதி­கா­லை­யாக இருந்­த­தால் தொழி­லா­ளர்­கள் 12 பேரும் ஆழ்ந்த உறக்­கத்­தில் இருந்­தனர். இதனால் தீ மூண்டதை அவர்கள் உணர வில்லை.

தீ பர­விய வேகத்­தில் தொழி­லா­ளர்­கள் 11 பேரும் உடல் கருகி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளு­டன் ஒரு தொழி­லாளி உயி­ரு­டன் மீட்கப்­ பட்­டார்.

அவர் சன்னல் வழியாக வெளி யேறி தப்பியதாகக் கூறப்படு கிறது. காந்தி மருத்­து­வ­ம­னை­யில் ேசர்க்கப் பட்டுள்ள அவ­ரது உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்ளது.

தீ வி­பத்து குறித்து தக­வ­ல­றிந்து அங்கு வந்த தீய­ணைப்பு மற்­றும் மீட்­புக்­கு­ழு­வி­னர் விரைந்து செயல்­பட்டு மீட்­புப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். சரக்­குக் கிடங்­கில் ஏற்­பட்ட மின்­ க­சிவு தீ விபத்­துக்கு கார­ண­மாக இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே விபத்­தில் 11 தொழி­லா­ளர்­கள் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­துக்கு பிர­த­மர் மோடி இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

"ஹைத­ரா­பாத்­தில் உள்ள போய்­கு­டா­வில் ஏற்­பட்ட பயங்­கர தீ விபத்­தில் 11 பேர் உயிர் இழந்­தது வேதனை அளிக்­கிறது. துய­ர­மான இந்­தத் தரு­ணத்­தில் என் எண்­ண­மும் மன­மும் உயி­ரி­ழந்­த­வர்­களை பிரிந்து வாடும் குடும்­பங்­க­ளு­டன் உள்­ளது.

"இறந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு பிர­த­மர் தேசிய நிவா­ரண நிதி­யி­லி­ருந்து தலா ரூ.2 லட்­சம் கரு­ணைத் தொகை­யாக வழங்­கப்­படும்" என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ், விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­துக்கு தலா ரூ.5 லட்­சம் நிவா­ர­ணத் தொகை வழங்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.