விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

விமானப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

1 mins read
d746f156-e80a-4dc5-8874-63d847fc700f
-

புது­டெல்லி: இந்­தியா, அதன் விமான நிலை­யங்­களில் அமல்­படுத்­தியி­ருந்த கொவிட்-19 கட்­டுப்­பாடு ­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளது.

இந்­திய விமான போக்­குவரத்தை இயல்பு நிலைக்­குக் கொண்டு வரும் நோக்­கோடு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி பய­ணி­க­ளுக்கு இடையே இருக்­கை­களில் இடை­வெளி தேவை­யில்லை என்று இந்­திய உள்­நாட்டு விமான போக்­கு­ வ­ரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருக்கைகளுக்கு இடையே இடைவெளி தேவையில்லை என்­ப­தால் இனி விமா­னத்­தின் அனைத்து இருக்­கை­க­ளி­லும் பய­ணி­கள் முன்பு ­போல பய­ணம் செய்ய முடி­யும்.

கிரு­மித் தொற்று அச்­சம் கார­ண­மாக விமா­னப் பணிப்­பெண்­கள் அதற்­கு­ரிய முன் எச்­ச­ரிக்கை பாது­காப்பு உடை­களை அணிய வேண்­டும் என்று கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டிருந்தது.

இந்­தக் கட்­டுப்­பா­டும் தற்­போது அகற்­றப்­பட்­டுள்­ளது.

இத­னால் விமான பணிப்­பெண்­கள் வழக்­கம் போல தங்­க­ளது சீரு­டை­களில் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­ப­டுவர். மேலும், விமான நிலை­யங்­க­ளி­லும் பய­ணி­களை பரி­சோ­திக்­கும் நடை­மு­றை­களில் விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­படு­வ­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.