அமித் ஷாவுடன் சந்திப்பு
புதுடெல்லி: ேமற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தின் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக உள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாதுஷேக்கை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பாக்துய் கிராமத்தைச் சேர்ந்த வர்கள் அதே கிராமத்தில் உள்ள சில வீடுகளுக்குத் தீ வைத்தனர். இதில் பத்து பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில பாஜக மாநில கட்சித் தலைவர் சுகந்தா மஜும்தார் தலைமையில் ஒரு குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது. இதையடுத்து மாநில அரசிடம் மத்திய அரசு, சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை கேட்கும் எனத் தெரிகிறது.
புதுடெல்லி: 2023ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி முழுவதுமாக சுத்தம் செய்யப்படும் என்று டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். முன்னதாக 2025ஆம் ஆண்டிற்குள் யமுனை நதி தூய்மையாக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்த நிலையில் வரும் டிசம்பர் 2023ஆம் ஆண்டிற்குள் தூய்மைப்படுத்தப்படும் என டெல்லி அமைச்சர் தற்போது உறுதியளித்துள்ளார்.
யமுனா ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் கலப்பதால் 'பாஸ்பரஸ்' அளவு பல மடங்கு அதிகரித்து வெண்ணிற நுரை ஏற்படுகிறது.
ரூ.19,111 கோடி சொத்து பறிமுதல்
புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கி பல ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரது ரூ.19,111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், கடந்த 15ஆம் தேதி நிலவரப்படி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

