ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு

1 mins read
dcd91b28-df54-4b51-a99c-98c55a7de618
மலர்த் தோட்டத்தைப் பார்வையிட்டு மகிழும் சுற்றுலாப் பயணிகள். படம்: ஊடகம் -

ஸ்ரீந­கர்: ஜம்மு காஷ்­மீ­ரில் அமைந்­துள்ள ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய துலிப் மலர்த் தோட்­டம் நேற்று முன்­தி­னம் பார்­வை­யா­ளர்­க­ளுக்குத் திறக்­கப்­பட்­டது.

ஸ்ரீந­க­ரில், தால் ஏரியை ஒட்டி அமைந்­துள்­ளது இந்­திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்­டம்.

நூற்­றுக்­க­ணக்­கான ஏக்­கர் பரப்­ப­ள­வில் பரந்து விரிந்­துள்ள இத்­தோட்­டத்­தில் பல வண்­ணங்­களில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட துலிப் மலர்­கள் வளர்க்­கப்­படு­கின்­றன.

ஆண்­டு­தோ­றும் வசந்த காலத்­தில் இங்கு துலிப் திரு­விழா நடை­பெ­றும். அதில் உல­கம் முழு­வ­தி­லும் இருந்து ஏரா­ள­மான சுற்­று­லாப் பயணி­கள் வருகை தரு­வர்.