உடற்பயிற்சிக் கூடம் அமைக்க கொள்ளை; ஆடவர் சிக்கினார்

உடற்பயிற்சிக் கூடம் அமைக்க கொள்ளை; ஆடவர் சிக்கினார்

1 mins read
52ae56da-c57c-4301-88de-6e902bd74e96
கொள்ளையடித்த விலையுயர்ந்த பொருள்கள். படம்: இந்திய ஊடகம் -

திருப்­பதி: திருப்­ப­தி­யில் உடற்­பயிற்சிக்கூடம் அமைப்­ப­தற்­காக இரண்டு வீடு­களில் ரூ. 70லட்­சம் மதிப்­புள்ள நகை, வெள்ளிப் பாத்­திரங்­கள், பணத்­தைக் கொள்ளை அடித்த ஆட­வர் அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கி­னார்.

சுரேஷ் என்ற அந்த ஆட­வ­ரின் வீட்­டில் இருந்து 1.610 கிலோ கிராம் தங்க நகை­கள், 13 கிலோ வெள்ளிப் பொருள்­கள், ரூ. 5 லட்­சம் பணம் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் பறி­முதல் செய்­த­னர்.

திருப்­பதி அருகே இருக்­கும் ஐராலா என்ற ஊரில் உள்ள ஒரு வீட்­டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி­யும் இம்­மா­தம் 13ஆம் தேதி வேறு ஒரு வீட்­டி­லும் சுரேஷ் திருடி இருக்­கிறார் என்று அதி­கா­ரி­கள் கூறினர்.

பல கோணங்­களில் விசா­ரணை செய்த காவல்­துறை சுரேஷ்­தான் திரு­டன் என்­பதை முடிவு செய்­தது. அவ­ரி­டம் மேலும் விசா­ரணை நடக்­கிறது.

அந்த இரண்டு வீடு­க­ளி­லும் சுரேஷ் நண்­ப­ரைப் போல நடித்து தன்னை பழக்­கப்­ப­டுத்­திக்கொண்டு பிறகு வீடு­களில் யாரும் இல்­லாத போது கதவை உடைத்து திருடி இருக்­கி­றார் என்று நம்­பப்­ப­டு­கிறது.