5ஜி தொலைத்தொடர்பு சேவை இந்த ஆண்டில் அறிமுகமாகும்

5ஜி தொலைத்தொடர்பு சேவை இந்த ஆண்டில் அறிமுகமாகும்

1 mins read
50cd4a70-3743-4e47-88fd-6146028d2dcf
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இந்­தாண்டு இறு­தி­யில் 5ஜி தொலைத்­தொ­டர்புச் சேவை­கள் அறி­மு­கப்­படுத்­தப்­படும் என்று நேற்று மத்திய அரசு அறி­வித்­தது.

மாநி­லங்­க­ள­வை­யில் பேசிய மத்­திய தொலைத் தொடர்­புத்­துறை இணை­ய­மைச்­சர் தேவு­சின் சவு­கான் அந்தத் தக­வலை வெளி­யிட்­டார்.

அர­சாங்­கத்­தின் பிஎஸ்­என்­எல் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னம் கம்பி இணைப்பு இல்­லாத 4ஜி சேவையை விரை­வில் தொடங்கும் என­வும் மத்திய அமைச்­சர் தெரி­வித்­தார்.