பிரமுகரின் மகளுக்காக முதல் மாணவி நீக்கம்; கடிதம்; உயிர்மாய்ப்பு; ஆர்ப்பாட்டம்; முற்றுகை

பிரமுகரின் மகளுக்காக முதல் மாணவி நீக்கம்; கடிதம்; உயிர்மாய்ப்பு; ஆர்ப்பாட்டம்; முற்றுகை

1 mins read
f7b20ec3-f9d0-4c34-b5ef-40e52cd5bbba
-

திரு­மலை: ஆந்­திரா­வின் ஆளும் கட்­சி­யான ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த பிர­மு­கர் ஒரு­வரின் மகள், முதல் மதிப்­பெண் பெற வேண்­டும் என்­ப­தற்­காக படிப்பில் முதல் மாண­வி­யா­கத் திகழும் ஒரு பெண்ணை பள்­ளிக்­கூ­டத்தை விட்டு நீக்­கி­விட்­ட­னர்.

அந்­தப் பெண் கடி­தம் எழு­தி­வைத்­து­விட்டு தன் உயிரை மாய்த்­துக்­கொண்ட சம்­ப­வம் பெரும் பர­பரப்­பாகி இருக்­கிறது. இது பற்றி ஊட­கத் தக­வல்­கள் பல விவ­ரங்­களைத் தெரி­வித்­துள்­ளன.

ஆந்­திர மாநி­லம், சித்­தூர் மாவட்டம், பல­ம­னே­ரில் செயல்­படும் பிரம்­மர்ஷி என்ற பள்­ளிக்­கூ­டத்­தில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்­தார்.

இவர் படிப்­பில் முதல் மாண­வி­யாக இருந்­தார். ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த முக்­கிய பிர­மு­க­ரான சுனில் என்­ப­வ­ரின் மகள் பூஜிதா படிப்­பில் இரண்­டாம் இடத்­தில் இருந்­தார்.

மாணவி மிஸ்­பாவை பள்­ளிக்­கூ­டத்­தை­விட்டு நீக்­கி­விட்­டால் பூஜிதா முதல் இடத்­திற்கு வந்­து­வி­ட­லாம் என்று திட்­ட­மிட்ட அந்த அர­சி­யல்­வாதி, பள்­ளிக்­கூட தலைமை ஆசி­ரி­யர் ரமே­ஷின் உத­வியை நாடி­னார். இதன் விளை­வாக மிஸ்பா பள்­ளிக்­கூ­டத்­தில் இருந்து நீக்­கப்­பட்­டார். இந்த அதிர்ச்­சியைத் தாங்க முடி­யாத மிஸ்பா, தன்­ தந்­தைக்குத் தன் கைபட ஒரு கடி­தத்தை எழு­தி­வைத்­து­விட்டு தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

அந்­தக் கடி­தத்­தில் என் மர­ணத்­திற்கு பூஜி­தா­தான் ஒரே கார­ணம் என்று மிஸ்பா குறிப்­பிட்டிருந்தார்.

இந்த விவ­கா­ரம் விஸ்­வ­ரூ­பம் எடுத்­ததை அடுத்து மிஸ்­பா­வின் பெற்­றோர்­கள், உற­வி­னர்­கள், மாண­வர் சங்­கத்­தி­னர் அனை­வ­ரும் பள்­ளிக்­கூ­டத்தை முற்­று­கை­யிட்­ட­னர்.