லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 403 தொகுதிகளில் 255 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்ய நாத் நேற்று பதவி ஏற்றார்.
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் விளை யாட்டுத் திடலில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ஆளும் பாஜக மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் பங்கேற்றனர்.

