புதுடெல்லி: இந்திய செய்தி ஊடகங்களுக்கு கூகல் போன்ற நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கும் நாட்டு நடப்புகள் தொடர்பான செய்திகள் இணையத்தளங்களில் மின்னிலக்க வடிவத்தில் கிடைப்பதாகவும் கூகல் போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அந்தச் செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வதாகவும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மேரி பால் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்யும் நிலையில், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் கூகல் போன்ற நிறுவனங்கள் செய்திக்குரிய பணத்தை அளிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது.

