ஐஃபோனில் அருமையான படங்கள்: தமிழக மாணவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் பாராட்டு

1 mins read
8b303770-8282-42fe-9289-20bd04f0ee0c
-

ஐஃபோனில் படமெடுத்து அசத்திய தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

'ஐஃபோன் 13 மினி' ரக திறன்பேசிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 40 பேர் எடுத்த படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க எழும்பூர் அரும்பொருளகத்தின் மாணவர் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

'கதைகளின் நிலம்' என்ற தலைப்பிலான அந்தப் படங்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்வதாக திரு டிம் குக் குறிப்பிட்டார்.

மாணவர்களின் படங்களைத் தமது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த இளம் மாணவர்கள் கேமராக்களின் மூலம் தங்கள் சமூகத்தின் உண்மையான சாரத்தைப் படம்பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி வரை பொதுமக்கள் அந்தப் படங்களைப் பார்வையிடலாம்.