புதுடெல்லி: அனைத்துலக விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பூஸ்டர் ஊசி போடுவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நேற்று முதல் அனைத்துலக விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
இதனால் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
எனினும், பல்வேறு நாடுகளில் கொரோனா பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் இன்னும் கொரோனா பூஸ்டர் ஊசி போடும் நடவடிக்கை தொடங்கவில்லை.
இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், அலுவலகம் சார்ந்த காரணங்களுக்காக ஏராளமானோர் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அவர்களில் பூஸ்டர் போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பெரும்பாலான நாடுகளுக்குள் நுழைய முடியும் என்ற நிலை நிலவுகிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பரவலாக நீடித்து வருகிறது. இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளாதவர்களைத் தேடிப்பிடித்து தடுப்பூசி போடும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், வெளிநாடு செல்பவர்களுக்கு பூஸ்டர் ஊசி போடும் நடவடிக்கையை இயன்ற விரைவில் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
அரசாங்கம் சார்பில் நாடு முழுவதும் பூஸ்டர் ஊசி போடும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாத பட்சத்தில், தனியார் மருத்துவமனைகள் மூலம் பூஸ்டர் ஊசி போடுவதற்கு ஏற்பாடு செய்யலாம் என நிபுணர்கள் ஆலோசனை வழங்கி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், வெளிநாடு செல்வோர் தங்கள் சொந்த செலவில் பூஸ்டர் ஊசி போட்டுக்கொள்ளத் தயாராக இருப்பதால் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பது நல்லது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் போடப்படும் பூஸ்டர் ஊசிக்கான விலையை மத்திய அரசே தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக, அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கும் பூஸ்டர் ஊசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என மத்திய சுகாதார அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்து

