மின் விபத்து: கடந்த மூன்று ஆண்டுகளில் 17,781 பேர் பலி

மின் விபத்து: கடந்த மூன்று ஆண்டுகளில் 17,781 பேர் பலி

1 mins read
f4b2492a-2af6-41b0-a17e-d02b8c99f8e0
-

புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் நிகழ்ந்த மின் விபத்துகளால் 17,781 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்மானப் பிரிவுகள், தொழிற்சாலைகள், வீடுகளில் ஏற்பட்ட மின்விபத்துகள் பற்றிய தரவுகளை மத்திய அரசு திரட்டியுள்ளதாகவும் அதன்படி இறந்தவர்களின் எண்ணிக்கை தெரிய வந்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

"நாட்டில் ஆறு மண்டலங்களாக உள்ள மின்பகிர்மான நிர்வாகத்தில் 2018-19ஆம் ஆண்டில் 6,646 பேரும் 2019-20ஆம் ஆண்டில் 5515 பேரும் 2020-21ஆம் ஆண்டில் 5,620 பேரும் என மொத்தம் 17,781 பேர் மின் விபத்துகளால் உயிரிழந்துள்ளார்கள்.

"தவிர பல்லாயிரக் கணக்கான விலங்கினங்க ளும் உயிரிழந்துள்ளன. பொருள் சேதம் பற்றிய கணக்கீடு மத்திய அரசிடம் இல்லை," என்றார் அமைச்சர் ஆர்.கே.சிங்.

மத்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை முறையாக அமல்படுத்துவதன் மூலம் மின்சார விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுவதை பெருமளவு தடுக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், மாநில மின்சார வாரியங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.